தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-03-17 07:34 GMT

சென்னை,

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசத் தொடங்கி உள்ளது.

இதனிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் சற்று தணிந்துள்ளதுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்குமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்