தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-10-04 18:45 GMT

ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், துணை தலைவர் யாசர்அரபாத், துணை செயலாளர்கள் உஸ்மான், சீனி ரஜப்தீன், மீரான் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அப்துல்கரீம் செயல் திட்டங்களை தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில், மக்களிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து வருகின்ற காரணத்தால் இந்த மாதம் முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது, முஸ்லிம்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் முறையில் புதிய வழிமுறையால் 20 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில் 830 போலி நிறுவனங்களால் ரூ.144 கோடி கல்வி உதவி நிதி பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக கல்வி உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்