தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2022-12-31 19:43 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அப்துல்கரீம், மேலாண்மை குழு தலைவர் சம்சுல் லுஹா ரகுமானி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்சாரி, மாவட்ட பொருளாளர் சாந்து உமர், தணிக்கை குழு உறுப்பினர் யூசுப் அலி, மாநில செயலாளர் நெல்லை செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிப்ரவரி 5-ந் தேதி திருச்சியில் நடைபெறும் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்பதை உடனே நிறுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்