கேரளத்துக்கு உதவ தமிழ்நாடு தயாராக உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2024-08-02 16:35 GMT

சென்னை,

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்