தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டம்;

Update: 2022-06-02 19:14 GMT

கரூர்,

பணிமாறுதல் ஆணை

கரூர் மாவட்ட கல்வித்துறையில் ஒன்றியம் விட்டு வேறு கல்வி மாவட்டத்திற்கு பல கி.மீ. தொலைவிற்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், பணிமாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 4-வது நாளாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட மத்திய மண்டலம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம்

இதற்கு மாநில துணைத்தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். கரூர் வட்டார செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ் வரவேற்றார். மாநில செயலாளர் கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றினர்.இதில் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்