தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடையநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி பாராளுமன்றம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் இன்பராஜ், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்றார். மாநில இளைஞரணி தலைவர் வியங்கோபாண்டியன், துணை பொது செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் அரசி, மாவட்ட பொருளாளர் வெள்ளத்துரை, சிறுபான்மை அணி தலைவர் செய்யது மக்தூம், செயலாளர் மைதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேஷ்குமார், ஒன்றிய செயலாளர் காசிப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்டன், கடையநல்லூர் நகர தலைவர் சங்கிலி முருகன், கனிபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் 2024-ல் நடைபெறும் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடையநல்லூரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் அதிநவீன மருத்துவ படுக்கைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்