தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு விழா

கடையநல்லூர் அருகே வடகரையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு விழா நடந்தது.

Update: 2023-03-27 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே வடகரையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 522-வது புதிய கிளை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கி திறந்து வைத்தார். வடகரை தீ.பா.பள்ளிவாசல் தலைவர் அப்துல் கபூர், பெரிய பள்ளிவாசல் தலைவர் அசனார், ரஹ்மானிபுரம் பள்ளிவாசல் தலைவர் காதர் மைதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடகரை வங்கி கிளை மேலாளர் அருண்குமார் வரவேற்றார்.

வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் நவநீதகிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், "பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடக்கமாக தமிழகத்தில் 522-வது புதிய கிளையை திறந்திருக்கிறோம். இந்த வங்கி சிறு-குறு வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்" என்றார். விழாவில் கடையநல்லூர் கிளை மேலாளர் மகேஸ்வரன், செங்கோட்டை கிளை மேலாளர் சரவணன், உதவி மேலாளர் கனக முரளி, வர்த்தக சங்கத் தலைவர் ரெசவு மைதீன், நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர் ரகுமத்துல்லா, ஜாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமன், கோல்டன் கிளப் முன்னாள் தலைவர் முத்துகுமார் உள்பட வங்கியின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்