பிரான்ஸ் நகரில் தமிழர் அமைப்பின் சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு வரவேற்பு

65-ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு பங்கேற்றார்.

Update: 2022-08-29 11:59 GMT

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் நடைபெறும் 65-ஆவது காமன்வெல்த் மக்களவை மாநாட்டில் பங்கேற்பதற்காக வடஅமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளர்கள்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக கலிபோர்னியா மாநிலம், சேக்ரமெண்டோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வருகை தந்திருந்த சட்டப்பேரவைத் தலைவர் அவர்களை வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் கடந்த 21.08.2022 அன்று சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழக வளாகத்தில், இந்தியத் தூதர் முனைவர் டி. வி. நாகேந்திர பிரசாத் அவர்கள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் முனைவர் கி. ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் 25.08.2022 அன்று நடைபெற்ற 65-ஆவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. மு. அப்பாவு அவர்களுக்கு, கடந்த 27.08.2022 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில், பிரான்ஸ் திருவள்ளூவர் கலைக்கூடம் என்ற தமிழர் அமைப்பின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், பிரான்சில் உள்ள இந்தியத் தூதரக செயலாளர் திரு. குல்தீப் சிங் நேகி, பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. எம். தசரதனே, பிரான்ஸ் திருவள்ளூவர் கலைக்கூடம் தலைவர் திரு. எம். அண்ணாமலே பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்