சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டம்
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கோரியுள்ளது.
ரெயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள மந்தைவெளி, பெருங்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதற்காக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரெயில் நிலையங்களை மேம்படுத்தி, வணிக வளாகங்கள், உணவகங்கள், பார்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.