3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update:2022-05-26 19:01 IST

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சார்பில் 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நா டு அரசு அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கிரிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜீவா, மாவட்ட ஓய்வூதியர் சங்க செயலாளர் குலோத்துங்கன், காப்பாளர் சங்க நிர்வாகி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு துறையின் மாநில தலைவர் கணேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திரளான தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு 2003 முதல் செயல்பட்டு வரும் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்