மழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை என புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;

Update:2023-12-25 15:37 IST
கோப்புப்படம் 

தூத்துக்குடி,

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"தென் மாவட்டங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்க வேண்டும். மழை, வெள்ள பாதிப்புகளை அரசு முறையாக கையாளவில்லை. திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது. தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை.

இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொடர் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க தனி வழிமுறை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு பணிகளில் கவனம் செலுத்தாமல் நிதியை பெறுவதில் மட்டுமே தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது"

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்