தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-11-24 19:30 GMT


ஓசூர், நவ.25-

ஓசூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க கோரியும், நோயினால் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார். மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் சி.பி.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்