தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கேரள மாநிலத்தை போல காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து விலக்க வேண்டும். பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு முழுமையாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டத்தை குறைக்க வனத்துறை பரிந்துரை செய்யும் மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். வனத்துறை சார்பில் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.