தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2023-07-30 11:33 GMT

வந்தவாசி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ சார்பில் வந்தவாசி தேரடியில் உள்ள தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் ஜா.வே.சிவராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், முரளி, ஆ.உதயகுமார், இரா.ராமகிருஷ்ணன், கி.பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்