தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-07-21 17:41 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவை இணைந்து நடத்திய தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இதனையொட்டி தமிழ்நாடு நாள் விழா அரசு சாதனை விளக்க கண்காட்சியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக இந்த ஊர்வலம் காலை 10.30 மணியளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் ஊர்வலம் மதியம் சுமார் 1.30 மணிக்கு மேல் தான் தொடங்கியது. இதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 3½ மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். இதைகண்ட பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் வகுப்பு நேரத்தை அதிகாரிகள் வீணடிப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்