தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.;
மணமக்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்தினார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி- சாந்தி தம்பதியரின் மகள் காஞ்சனாவுக்கும், சென்னையை சேர்ந்த வி.புருஷோத்தமன்- மாதவி தம்பதியரின் மகன் வினோத் ரங்கநாத்துக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்து கூறினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மல்லிகார்ஜூன கார்கே
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனி விமானம் மூலம் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மணமக்களை வாழ்த்திய பிரபலங்கள் விவரம் வருமாறு:-
சபாநாயகர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், சி.வி.கணேசன், செந்தில் பாலாஜி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுசெயலாளர் அபுபக்கர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் ஸ்ரீவல்ல பிரசாத், டாக்டர் செல்லக்குமார், புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மூத்த வக்கீல் ஆர்.காந்தி, நடிகர் சிவக்குமார் உள்பட முக்கிய பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள்.
விழாவுக்கு வந்தவர்களை காமராஜர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாகி கே.எஸ்.ஏ. தமிழரசு சம்பந்தம், காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர்.