சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி முன்னிலை வகித்தார். மணிப்பூர் மாநிலத்தில் சிதைக்கப்பட்ட கிறிஸ்தவ பேராலயங்கள் மற்றும் ஏழை மக்களின் வீடுகளை சீரமைக்க மத்திய அரசு சிறப்பு பொருளாதார பங்களிப்பை ஒதுக்க வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் அடைக்கலம் மற்றும் நிர்வாகிகள் செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.