மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்?

மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update: 2024-01-23 07:19 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் தொழில்துறை, சமூக நலத்துறை, கலால் துறை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள், மகளிருக்கு முன்னுரிமை அளிப்பது, தற்காப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்