அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ், ஆங்கிலப் பாடம் - அமைச்சர் பொன்முடி தகவல்
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.;
சென்னை,
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் கொண்டு வரப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறும்போது, அரசு கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களைப் பொறுத்து மொழிப்பாடங்கள் மாறிக்கொண்டு இருந்தன. இதுகுறித்து துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசி, எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.
அதுவும் எல்லா பல்கலைக் கழகங்களிலும் பொதுவாக பின்பற்றப்படும் என்று கூறினார்.