தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் இளம்பெண்ணை கேலி செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை கேலி செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக அவர், மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-04-04 12:32 IST

சென்னையை அடுத்த தாம்பரம் ெரயில் நிலைய சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர், இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்குவந்த அப்பெண்ணின் உறவினர், அந்த நபரிடம் இதுபற்றி தட்டிக்கேட்டார். அந்த நபர், அவரை தாக்கினார். இதில் அவரது கை விரல்களில் முறிவு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், தாம்பரம் ெரயில்வே பாதுகாப்பு படையில்(ஆர்.பி.எப்.) சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சீனிவாஸ் நாயக் (வயது 28) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது.

அதற்குள் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் ெரயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீனிவாஸ் நாயக்கை, தாம்பரம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று காலை ெரயில்வே போலீஸ் நிலையத்தில் விசாரணையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக், திடீரென போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிச்சென்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்குள் மெதுவாக வந்து கொண்டிருந்த மின்சார ெரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மின்சார ரெயில் என்ஜினின் டிரைவர், உடனடியாக பிரேக் பிடித்து சற்று முன்னதாகவே ெரயிலை நிறுத்தி விட்டார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தாம்பரம் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவரை ெரயில்வே போலீசார் மீட்டு தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் சமரசமாக செல்வதாக போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ெரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக் மீது புகார் செய்யப்படாததால் அவரை போலீசார் விடுவித்தனர்.

இந்தநிலையில் இதுபற்றி தகவல் அறிந்த ெரயில்வே பாதுகாப்பு படை உதவி பாதுகாப்பு கமிஷனர் ராஜய்யா, தாம்பரம் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் ெரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் நாயக்கை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்