தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா - விமானங்கள் கண்கவர் சாகச நிகழ்ச்சி
பயிற்சி பள்ளி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி பங்கேற்றார்.;
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானிகளுக்கான பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் சர்வதேச பயிற்சி கருத்தரங்கம் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அங்கு HAL HT2, Platus, Kiran, Mi-17, Dornier உள்ளிட்ட போர் விமானங்களில் விமானிகள் நிகழ்த்திய கண்கவர் சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.