ஆரணி கோட்டை மைதான பகுதியில்ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 2 நாள் கெடு .

ஆரணி கோட்டை மைதான பகுதியில்ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற 2 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-03 15:59 GMT

ஆரணி

ஆரணி கோட்டை மைதான பகுதியில்ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு 2 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆரணி நகரில் கோட்டை மைதானத்தில் மாவட்ட மினி விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. வெளிப்பகுதியில் 4 புறங்களிலும் டீக்கடைகள், டைப்பிங் சென்டர், ஓட்டல், காய்கறி கடை என 80 க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோட்டை மைதானத்தை சுற்றிலும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா காவல் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம் அலுவலக, வனத்துறை அலுவலகம், நகர காவல் நிலையம் மற்றும் உழவர் சந்தை என அனைத்து அரசு அலுவலகங்களும் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக செயல்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு கடைகளால் கோட்டை மைதானத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, பள்ளி விடும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆரணி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

அவரது பரிந்தரையின்பேரில் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாள் கெடு விதித்துள்ளார்.

அதன்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும், நாளைக்குசுள் அகற்றாவிட்டால் 6-ந் தேதி (திங்கட்கிழமை) ஆரணி நகராட்சி அதிகாரிகளுடன் ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்