தையல் கலை தொழிலாளர்கள் சங்க கூட்டம்

செங்கோட்டையில் தையல் கலை தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

செங்கோட்டை:

தமிழ்நாடு தையல் கலை தொழிலாளா்கள் செங்கோட்டை கிளை சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. செங்கோட்டையில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர தலைவா் ராமநாத் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவா் வள்ளிநாயகம், செயலாளா் ஓவியாசிவனணைந்தபெருமாள், பொருளாளா் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் மாரியப்பன் வரவேற்று பேசினார். மாநிலத்தலைவா் (பொறுப்பு) பாண்டியன், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாநில ஆலோசனைக்குழு உறுப்பினா் காளிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

அதனைதொடா்ந்து சங்க நிர்வாகிகள் பஸ் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முத்துசாமி பூங்காவில் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் நகர துணைத்தலைவா் கபூர், பொருளாளா் முத்துப்பட்டன், செயல் அலுவலா் செய்யதுஅலி, செயற்குழு உறுப்பினா்கள் அய்யப்பன், அருள்ஆறுமுகம், மாரிமுத்து, பிச்சையா, ஈசாக், சரவணன், மணிகண்டன், நயினார், மாரிச்செல்வம், முஸ்தபா, பாலகிருஷ்ணன், தையல் கலை மகளிர் பிரிவு நிர்வாகிகள் மைதீன்பீவி, பரக்கத்நிஷா, தேவி, வசந்தா உள்பட பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்