வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு செய்தார்.;

Update: 2023-08-16 18:27 GMT

அரக்கோணம்

வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு செய்தார்.

அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கைனூர், வடமாம்பாக்கம், இச்சிபுத்தூர், கிழவனம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் துணை தாசில்தார் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்