சுயம்பிரகாச சுவாமியின் குருபூஜை விழா

சுயம்பிரகாச சுவாமியின் குருபூஜை விழா நடைபெற்றது.;

Update: 2023-02-11 18:39 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுயம்பிரகாச சுவாமி மடத்தில் 128 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த சுயம்பிரகாச சித்தருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுயம்பிரகாச சுவாமியாக வீற்றிருக்கும் லிங்கத்திற்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மாலைகளால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு சுயம்பிரகாச சுவாமியின் திருவுருவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் தேங்காய், பழங்களை படைத்து வழிபாடு செய்தனர். மடத்திலிருந்து தொடங்கிய தேர் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் மடத்தை வந்தடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்