அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் பணி இடை நீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் பணி இடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.;

Update:2022-10-01 01:02 IST

நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில் பூசாரி அண்ணாதுரையிடம், கடந்த 27-ந் தேதி ரூ.21 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தனை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேசுக்கு வழங்க செயல் அலுவலர் லட்சுமி காந்தன் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தனை பணி இடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்