சேலம் மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

சேலம் மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-09-24 20:27 GMT

சேலம், 

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாரதிராஜா (வயது 30). இவர் இதற்கு முன்பு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜாவை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் கூறும் போது,'கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு உதவி புரிந்தது உறுதிபடுத்தப்பட்டதால் அவர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்' என்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்