ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.;
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வேலூர் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தரேஷ் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வேலூர் ஊராட்சியில் பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்த அவர் உடனடியாக ஊராட்சி செயலர் முருகசுந்தரத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.