பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம்

மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-18 16:56 GMT

ஆரணி

ஆரணி அடுத்த குன்னத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நூலகராகவும், ஆய்வக உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தவர் கோவிந்தசாமி (வயது 60).

இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்ததால் போக்சோ சட்டத்தில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆய்வக உதவியாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்