நிலத்தை அளவீடு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கைதான சர்வேயர் பணி இடைநீக்கம்

நிலத்தை அளவீடு செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான சர்வேயர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.;

Update: 2022-08-22 21:37 GMT

சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). லாரி உரிமையாளரான இவருக்கு கஸ்தூரிபட்டி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரக்கோரி சங்ககிரி வட்ட நில அளவை துறையில் விண்ணப்பித்தார். அதனை செய்து கொடுக்க சங்ககிரி நில அளவை துறை சுற்றுக்குழு நில அளவையராக பணியாற்றி வந்த வைத்தீஸ்குமார் (40) என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன், இது தொடர்பாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சர்வேயர் வைத்தீஸ்குமார் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சர்வேயர் வைத்தீஸ்குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்