சாலை அமைக்கும் பணி ஆய்வு

சாலை அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.;

Update: 2023-07-12 19:00 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டியில் இருந்து நாட்டார்பட்டி வழியாக அரியப்பபுரம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து யூனியன் சாலையான இச்சாலையை ஒன்றியக்குழுவின் அனுமதியை பெற்று நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணிக்காக ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலைப்பணி தொடங்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக பாலங்கள் அமைத்தல், இணைப்பு சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தர்மராஜ், செந்தூர்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்