நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வருவாய் அலுவலர் ஆய்வு

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு செய்தார்.

Update: 2022-10-11 16:58 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பதிவேடுகள், நாட்டறம்பள்ளி வட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களின் பதிவேடு, தகவல் அறியும் உரிமை சட்ட பதிவேடு, வழக்கு பதிவேடு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி முன்னேற்றம், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நலிந்த பிரிவு மக்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமான பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்