கடையத்தில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
கடையத்தில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடையம்:
கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி குறுவட்ட பகுதிகளில் மாநில கூடுதல் தோட்டக்கலை இயக்குனர் இமானுவேல், தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி ஆகியோர் தற்போதைய கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் மற்றும் சிறுகிழங்கு பயிர்களையும் கள ஆய்வு செய்தனர். தற்போது அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் வறட்சி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, தென்காசி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தங்கம், வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜா, வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக்கலை அலுவலர் விவேகானந்த பத்மநாதன், கடையம் வட்டார வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் ஆகியோர் உடன் இருந்தனர்.