கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்க கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தினார்.;

Update: 2023-01-31 09:55 GMT

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரத்தை அருகே செவிலிமேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபவர்கள் பற்றிய தகவலை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்றங்கள் குறைவதோடு, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவே, அனைத்து கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்