32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-19 18:45 GMT

தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் குற்றங்களை தடுக்க நெசவாளர் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் செங்குந்தர் அருள்நெறி மன்றம் சார்பில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 32 இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க பொதுச்செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் சம்பந்தம் வரவேற்று பேசினார். நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். பின்னர் கஞ்சா கடத்தல், நகை பறிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, குடியிருப்போர் நல சங்க செயலாளர் சண்முகசுந்தரம், பந்தல் மேடை அமைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.. முடிவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலக செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்