குலசை தசரா திருவிழாவின் இறுதிநாளான இன்று சூரசம்ஹாரம்... குவியும் பக்தர்கள்.!

குலசை தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, கோவிலுக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.;

Update:2023-10-24 18:17 IST

குலசேகரன்பட்டினம்,

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர்.

விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

இந்த நிலையில், 10-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். விரதமிருந்து வேடமிட்ட பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்