போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கல்

போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டன.;

Update:2023-03-20 00:05 IST

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டம், போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்குதல் மற்றும் நூலக வளர்ச்சி பணிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். நூலகர் மேரிரோசரி சாந்தி வரவேற்றார். நூலக நண்பர்கள் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பை வழங்கப்பட்டது. நூலகத்திற்கு வந்து நூல்களை பெற்றுக்கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இல்லங்களுக்கே சென்று நூல்கள் வழங்குவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நூலக வளர்ச்சி பணிகள் குறித்து நூலகர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூலக நண்பர்கள் திட்டத்தில் நன்கொடை உறுப்பினர்களாக 167 பேருக்கான தொகை ரூ.5,010-யை பொறியாளர் சிவக்குமார் வழங்கினார். மாவட்ட மைய நூலக தன்னார்வலர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் பாடநூல்கள் வழங்கப்பட்டது. கரூர் ஊதிய மையத்தை சேர்ந்த மாவட்ட மைய, கிளை, ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகர்கள் 4 பெரும் புரவலர்களையும், 52 புரவலர்களையும் சேர்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்