விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2022-11-06 18:14 GMT

திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் பற்றிய விவசாயிகள் கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கி ேபசுகையில், விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கான இடுபொருட்கள், நெல் விதைகள், நுண்ணூட்டம், உயிர் உரங்கள் ஆகியவற்றை வழங்கி விவசாயிகளுக்கு திட்டங்களின் நோக்கம் அதன் நன்மைகள் பற்றி எடுத்து கூறினார். அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்தவும் கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் மேலாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்