திருவண்ணாமலை பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருவண்ணாமலையில் பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-28 16:54 GMT

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மோப்பநாய் உதவியுடன் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் உள்ள இடங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்