விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வேடசந்தூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.;
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வேடசந்தூரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தமிழர் கட்சி, இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேடசந்தூர் சுற்றுவட்டார கிராமங்களிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று வேடசந்தூரில் ஆய்வு செய்தார். அப்போது விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் ஆர்.ஹெச்.காலனி, வடமதுரை சாலை, சாலை தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கடைவீதி, பஸ் நிலையம், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். அனைத்து இந்து அமைப்பினரின் சார்பில் வேடசந்தூரில் 90 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.