நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் துறை வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அவர், குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். போலீசார் தங்களது கடமையை மட்டும் செய்யாமல், பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். தங்களது வாகனங்களை முறையாக பராமரித்தால் தான், ரோந்து மற்றும் கடத்தல் பணிகளில் சிறப்பாக ஈடுபட முடியும். சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்றார்.