"சும்மா தமாசுக்கு..." கலெக்டர் அலுவலக வளாகத்தில் சூதாடிய அரசு டிரைவர்கள்...! போலீசாரை கண்டு தலைதெறிக்க ஓட்டம்...!

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன டிரைவர்கள் சூதாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-12-26 11:17 GMT

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் வாகன நிறுத்தும் இடம் அமைந்துள்ளது. இங்கு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பயன்படுத்தும் கார்கள், வாகனங்களை நிறுத்திவைத்து அரசு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் அரசு டிரைவர்கள் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடரந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அரசு ஜீப் ஒன்றில் 5 பேர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் போலீசாரைக் கண்டதும் சீட்டுகளை பறக்கவிட்டு வாகனத்தைவிட்டு பதறியிடித்து வெளியேவந்தர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் ஒருவர், மனசாட்சி இல்லை, அறிவுவில்லையா உங்களுக்கு என்று அவர்களை நோக்கி கூறியார்.

இது அனைத்து வீடியோ பதிவு செய்யப்படுவதை அறிந்த அரசு வாகன டிரைவர்கள், தங்களை பாதுகாத்து கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனை அடுத்து சூதாடப் பயன்படுத்திய சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்