வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சோளிங்கரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வெள்ளத்தூரான் முதலி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சரவணன் (வயது 23). டிப்ளமோ படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரவணன் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். வேலை இல்லாத விரக்தியில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.