பிளஸ்-2 மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சூளகிரியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-11-22 18:45 GMT

சூளகிரி:

சூளகிரியில் காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவர் ஒருவர், விடுதியில் தங்கி, பிளஸ்-2 படித்து வருகிறார். இவர், சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த மாணவி, வேறு ஒருவருடன் பழகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த மாணவி தன்னுடன் பேசவில்லை என்று ஆத்திரம் அடைந்த மாணவர், நேற்று பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து அந்த மாணவியுடன் பேச வேண்டும் என்று கூப்பாடு போட்டுள்ளார். பின்னர், அவர் திடீரென கத்தியால் கை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீவிர சிகிச்சை

பின்னர் ரத்தம் வழிந்தோட அங்கிருந்து அந்த மாணவர் ஓட்டம் பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார், பேரிகை சாலையில் சுற்றி திரிந்த அந்த மாணவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்