நல்லம்பள்ளி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-06-17 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெயிண்டர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22). பெயிண்டர். இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்குக்கு சென்ற தொப்பூர் போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்