காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2023-05-31 05:00 GMT

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூரை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்