தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே கதிரடிக்கும் எந்திரத்தில் சிக்கி கை துண்டானதால் வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பாலக்கோடு
பாலக்கோடு அருகே கதிரடிக்கும் எந்திரத்தில் சிக்கி கை துண்டானதால் வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தோமலஅள்ளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கதிரடிக்கும் எந்திரத்தில் நாகராஜின் வலது கை சிக்கியது. இதில் அவர் கை துண்டானது.
இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். வேலைக்கு செல்ல முடியாததால் விரக்தியில் இருந்த நாகராஜ் நேற்று மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.