வெவ்வேறு இடங்களில் 3 தொழிலாளிகள் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-05-10 18:45 GMT

கூலித்தொழிலாளி

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் ரகு (வயது 24). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ரகு கடந்த 27-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி இறந்தார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகரசம்பட்டி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (53). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 8-ந் தேதி இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கேசவன் கடந்த 8-ந் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடல் நலக்குறைவு

தேன்கனிக்கோட்டை பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் சோமசேகர் (24). கூலித்தொழிலாளி. இவருடைய தாய் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் மனமுடைந்த சோமசேகர் கடந்த 8-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்