திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

Update:2023-03-19 00:30 IST

மத்திகிரி:

கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடகா மாநிலம் மதன்போர்கவுஸ் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (வயது 34) என்பவர் கடந்த 4 மாதங்களாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயராஜ் நேற்று முன்தினம் கம்பெனி குடோன் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர் சுந்தரன் (47) கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்