தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா சாரகப்பள்ளி பக்கமுள்ள எஸ்.குருபரப்பட்டியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 22). டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஹரீஷ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் அவர், அதன் பின்னர் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து 24-ந் தேதி வீடு திரும்பிய ஹரீசுக்கு 25-ந் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரீஷ் இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.